தருமபுரி அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலி

தருமபுரி அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
தருமபுரி அருகே நிதி நிறுவன அதிபர் விபத்தில் பலி
Published on

தருமபுரி:

தருமபுரி அடுத்துள்ள நாட்டாண்மை புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48.) நிதி நிறுவன அதிபரான இவர் பைனான்ஷியல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சத்யா நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவாகி விட்டார். தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com