லாரி டிரைவர் அடித்து கொலை: தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் விசாரணை

தருமபுரியில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டதில் பரிதாபமாக இறந்தார். அவரிடம் தகராறில் ஈடுபட்டவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி டிரைவர் அடித்து கொலை: தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் விசாரணை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்துள்ள சானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் சீனிவாசன் (வயது38). இவர் அடகாசன அள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர்கள் இரண்டு பேரும் பென்னாகரம் மேம்பாலம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு மது அருந்தினர். 

குடிபோதையில் ஒருவருக்கொருவர் தகராறு செய்து கொண்டு 2 பேரும் தாக்கி கொண்டனர். இதில் சீனிவாசனின் உடல் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டில் மயக்கம்  அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக  இறந்தார்.

இதையடுத்து சீனிவாசனுக்கு சுதாகருக்கும் நடந்த தகராறில் இவர் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்ட சுதாகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com