தர்மபுரி மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு

தர்மபுரி மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள்
பூக்கள்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இப்படி தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பூக்களின் விவசாயம் குறைந்துள்ளது. எனவே தர்மபுரி பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் வரக்கூடிய பூக்களின் வரத்தின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை விவரம் வருமாறு:-

குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 400-க்கும், செண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ. 30-க்கும், பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி ஒரு கிலோ ரூ.80-க்கும், சன்ன மல்லி ஒரு கிலோ ரூ. 340-க்கும் மற்றும் அலரி ஒரு கிலோ ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com