தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் வாங்கித் தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்ணெண்ணெய் கேனுடன் வந்த ராஜலட்சுமி.
மண்ணெண்ணெய் கேனுடன் வந்த ராஜலட்சுமி.
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

அப்போது ராஜலட்சுமி கலெக்டர் அலுவலகம் முன்பு தீ குளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தார். இதனைப் கலெக்டர் அலுவலகத்தின் வெளியே பாதுகாப்பு பணிக்கு நின்று கொண்டிருந்த போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அந்த பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜலட்சுமி கூறியதாவது:-

எனக்கு கடந்த 1998-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த மாது என்பவருடன் திருமணம் ஆனது. மேலும் எங்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு மகன்களை அவருடன் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நானும் எனது மகளும் தனியாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எனது கணவரிடம் இருந்து எங்களுக்கு ஜீவனாம்சம் வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com