தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
Published on

தருமபுரி:

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்தத் தொகையான அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தேவேந்திரன் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர்கள் அண்ணாதுரை மற்றும் தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் ராஜா நன்றியுரை கூறினார். 

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com