தாராபுரத்தில் 3 திருமணம் செய்த டிரைவர் கள்ளக்காதலி வீடு அருகே மர்ம மரணம்

3 திருமணம் செய்த டிரைவர் கள்ளக்காதலி வீடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரத்தில் 3 திருமணம் செய்த டிரைவர் கள்ளக்காதலி வீடு அருகே மர்ம மரணம்
Published on

தாராபுரம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). டிரைவர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றார். அங்கு ரெமோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். 2 குழந்தை கள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவியை விட்டு விட்டு தஞ்சை சென்றார். அங்கு உஷா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவரையும் விட்டு விட்டு தாராபுரம் வந்தார். இங்குள்ள நஞ்சியம் பாளையத்தில் தங்கினார். அப்போது லட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். இங்குள்ள நாடார் தெருவில் வசித்து வந்த ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் காலையில் ராஜா காயங்களுடன் ரோட்டில் மர்மமான முறையில் கிடந்தார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசுக்கு புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜா அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com