தரம்சாலா ஒருநாள் கிரிக்கெட்: 112 ரன்னில் சுருண்டது இந்தியா; டோனி 65 ரன்கள் சேர்ப்பு

தரம்சாலா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 112 ரன்களில் சுருண்டது. டோனியின் அரைசதத்தால் கவுரமான ஸ்கோரை எட்டியுள்ளது.
Published on

அதன்படி இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. ரோகித் சர்மா 2 ரன்னிலும், தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னிலும், மணீஷ் பாண்டே 2 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும், புவனேஸ்வர் குமார் 0 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

8-வது விக்கெட்டுக்கு டோனியுடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருக்கும்போது குல்தீப் யாதவ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். டோனியுடன் இணைந்து குல்தீப் யாதவ் 41 ரன்கள் சேர்த்தார். இது இந்தியாவிற்கு முக்கியமான ரன்னாக அமைந்தது.

அடுத்து வந்த பும்ராவை ஒருபக்கம் நிற்கவைத்து டோனி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 100 ரன்னை நெருங்கியது. இந்தியாவின் ஸ்கோர் 87 ரன்னாக இருக்கும்போது பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து சாஹல் களம் இறங்கினார்.

மறுமுனையில் விளையாடிய டோனி 78 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 36.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 39-வது ஓவரை பெரேரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை டோனி தூக்கியடித்தார்.


19 ரன்கள் எடுத்த குல்தீப் யாதவ்

ஆனால் பந்து பீல்டர் கையில் தஞ்சம் புக இந்தியா 112 ரன்னில் ஆல்அவுட் ஆனது. டோனி 65 ரன்கள் சேர்த்தார். சாஹல் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லக்மல் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com