பயங்கரவாதிகளின் போட்டோக்களை போலீசார் வெளியிடவில்லை- டிஜிபி திரிபாதி விளக்கம்

தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டதாக இன்று காலையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மறுத்தார்.
டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி
Published on

தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டதாக இன்று காலையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதுதொடர்பான 2 பேரின் புகைப்படங்கள் தொலைக் காட்சிகளில் வெளியானது.

இதனை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மறுத்தார். இது தொடர்பாக அவரிடம் தொலை பேசியில் கேட்ட போது அவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் தொடர்பாக எந்த புகைப்படத்தையும் நாங்கள் வெளியிடவில்லை. அதுபோன்று புகைப்படங்கள் வெளியிடுவதாக இருந்தால் முறைப்படி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து விரிவான தகவல்கள் அறிக்கையாக அனுப்புவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரணும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் நுழைந்ததாக வெளியான தகவலையடுத்து கோவில்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

ராணுவம் மற்றும் விமான படையை தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com