நாளை மறுநாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஓய்வு: பணி நீட்டிப்பு வழங்கப்படுமா?

மாநில உளவு பிரிவு டி.ஜி.பி. ஆக பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன் நாளை மறுநாள் ஓய்வு பெறும்நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஓய்வு: பணி நீட்டிப்பு வழங்கப்படுமா?
Published on

சென்னை:

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று மாநில உளவு பிரிவு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார். சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவியையும் அவர் கூடுதலாக கவனித்தார்.

நாளை மறுநாள் 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு முறைப்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது இன்று அல்லது நாளை தெரியவரும்.

அதே நேரத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன், ஜார்ஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com