தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது - டிஜிபி திரிபாதி

ஒரு சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது என்று டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்.
டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் புகைப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. வழக்குகள், சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. எதிர்பாராத விதமாக நடைபெற்றது. அதனால் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூற முடியாது.

ஒரு சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது. எங்கள் குடும்பத்தில் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது.

போலீசார் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். நாம் நமது வேலையை செய்வோம். போலீசாருக்கு தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இன்னும் பாதுகாப்பு பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com