தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - டி.ஜி.பி. உத்தரவு

தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை வந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி ஜேகே திரிபாதி
டிஜிபி ஜேகே திரிபாதி
Published on

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தீபாவளியையொட்டி பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையிலும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com