பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி: டி.ஜி.பி. உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி: டி.ஜி.பி. உத்தரவு
Published on

சென்னை:

போலீஸ் துறையில் பேண்டு வாத்திய இசைக்குழு உள்ளது. அவர்கள் அரசு மற்றும் போலீஸ் விழாக்களில் மட்டும் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இசை நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு போலீசார் செய்யும் சேவைகள் மற்றும் பணிகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com