

போலீஸ் டி.ஜி.பி. தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள், டி.ஜி.பி.க்கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள், சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த 7, 8, 9-ந்தேதிகளில் தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்து பதிவேடுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும் என்றும், வருகை பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும், அனைத்து வரைவு கடித தொடர்புகளும், குறிப்பாணைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும், அனைத்து காவல் வாகனங்களிலும் தமிழில் ‘காவல்’ என்று இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்து அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர் பலகைகளும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளனர்.