தேவகோட்டை அருகே மனைவி, மகள்களை பிரிந்தவர் வீட்டில் பிணமாக கிடந்தார்

தேவகோட்டை அருகே மனைவி, மகள்களை பிரிந்தவர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

தேவகோட்டை:

தேவகோட்டை தாலுகா சண்முகநாதபட்டணத்தை சேர்ந்தவர் தேவபாலன் என்ற முத்து(வயது 52). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இவர் மட்டும் சண்முகநாதபட்டணத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அந்த கிராம மக்கள் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தபோது முத்து இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவேகம்பத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து முத்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com