பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி: விரைவில் நியமிக்க ஆந்திர அரசு முடிவு

2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி: விரைவில் நியமிக்க ஆந்திர அரசு முடிவு
Published on

இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய  வீராங்கனையான ஐதராபாத்தைச் சேர்ந்த அவர் பாராட்டு, பரிசு மழையில் நனைந்தார்.

பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், தலைநகர் அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது. இதற்கிடையே 22 வயதான பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவியும் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ். டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com