தேன்கனிக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த 24 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த 24 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் போலீசார் உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் போலீசார் உள்ளனர்.
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பண்டிகங்காதர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள கள்ள துப்பாக்கிகள் புழக்கத்தை ஒழிக்க கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் மலைகிராமங்களில் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து ஒப்படைத்தால் வழக்கு பதிவு செய்ய மாட்டோம் எனவும், துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டுபிடித்தால் ஆயுத சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தண்டோரா போட்டு அறிவித்தனர்.

தேன்கனிக்கோட்டை பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள திப்பசந்திரம் வனப் பகுதியையொட்டி 24 நாட்டு துப்பாக்கிகள் கேட்பாரற்று நிலையில் கிடந்தது. இது குறித்து அந்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் 24 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com