டெங்கு காய்ச்சல்: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரின் மனைவி பலி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரின் மனைவி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சல்: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரின் மனைவி பலி
Published on

திருச்சி:

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மற்றும் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 குழந்தைகள் உள்பட 34 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் விஜயகுமாரின் மனைவி கனிமொழி(24) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கனிமொழி சிகிச்சை பலனின்றி இறந்தார். டெங்கு காய்ச்சலால் அவர் இறந்தது பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழிக்கு ரூஜிதா(3) என்ற குழந்தையும், ரக்ஷிதா என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com