பழனி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி

பழனி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலியானார். இது வரை பழனி வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.
பழனி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி
Published on

பழனி:

பழனி அருகே உள்ள தெற்கு சாத்தநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகள் காயத்திரி (வயது 17). நெய்க்கார பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மாலை திடீரென சுருண்டு விழுந்தார்.

உடனடியாக கருப்பசாமி தனது மகளை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்திரி பரிதாபமாக இறந்தார். இது வரை பழனி வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. தெற்கு சாத்தநாயக்கன் பட்டியில் மட்டும் 50 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com