டெங்கு காய்ச்சலால் 19 குழந்தைகள் பாதிப்பு - எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை

எழும்பூர் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 86 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலால் 19 குழந்தைகள் பாதிப்பு - எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை
Published on

சென்னை:

சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி, தேனி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து சென்னையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாதாரண காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தினமும் 100 முதல் 150 பேர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அங்கு டெங்கு வார்டில் உள் நோயாளிகளாக 50 பேரும் டெங்கு ‘பாசிட்டிவ்’ ஆக பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதே போல ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் 85 பேர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.

டெங்குவினால் தற்போது குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எழும்பூர் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 86 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 3 குழந்தைகளுக்கு டெங்கு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் எல்லா குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். டெங்கு பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர கண்காணிப்பில் நலமுடன் உள்ளனர்.

இதற்கிடையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4 போலீசாரும் நலம் பெற்று வீடு திரும்பினார்கள். அமைச்சருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் நாராயணமூர்த்தி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வர் வசந்தாமணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com