திருச்செந்தூரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

காயாமொழி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு கொசு
டெங்கு கொசு
Published on

திருச்செந்தூர்:

காயாமொழி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் அஜய் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை மருத்துவர்கள் சோமசுந்தரம், மெட்வினோ தேவதாசன், சபிதா, கன்னியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி தலைமை ஆசிரியை சங்கரி வரவேற்று பேசினார். மாவட்ட தாய் சேய் நலத்திட்ட அலுவலர் ஜெஸ்ஸிமேரி பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு குறித்து விளக்கி டெங்கு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அனைவரும் டெங்கு தடுப்பு குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

பேரணியில் வட்டார சுகாதார மேற்பார் வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி நான்கு ரதவீதிகள் வழியாக வந்து பள்ளியில் நிறைவு பெற்றது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com