ஆன்-லைன் கல்வியை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அருகே ஆன்-லைன் கல்வியை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். 

கோரிக்கைகளை விளக்கி மாநில குழு உறுப்பினர் ஓவியா பேசினார். அனைத்து மாணவர்களுக்கும் இணைய சேவையை உறுதிபடுத்தும் வரை ஆன்-லைன் கல்வி முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com