மணவாளநகரில் கூவம் ஆற்று கரையோரம் கட்டிய 42 கடைகள் இடிப்பு

மணவாளநகரில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டிய 42 கடைகளை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர்.
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் ஏராளமான வீடுகள், கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது. இதனை அகற்ற மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 42 கடைகள், 302 வீடுகள் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று காலை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.

முதல் கட்டமாக 42 கடைகள் மட்டும் இடித்து அகற்றப்பட்டது. 302 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்கிய பின்னர் வீடுகள் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரத்தை அதிகாரிகள் சேகரித்தனர். கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் எச்சரித்து உள்ள னர். திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com