ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல்- லாலு பிரசாத் யாதவுக்கு இடைக்கால ஜாமீன்

ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. #IRCTCScam #Lalu
ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல்- லாலு பிரசாத் யாதவுக்கு இடைக்கால ஜாமீன்
Published on

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com