டெல்லி: அரசு மருத்துவமனையில் சாக்கடை தூய்மை பணியின் போது தொழிலாளர் உயிரிழப்பு

டெல்லியில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது துப்பரவு தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லி: அரசு மருத்துவமனையில் சாக்கடை தூய்மை பணியின் போது தொழிலாளர் உயிரிழப்பு
Published on

புதுடெல்லி:

தலைநகர் புதுடெல்லியின் லஜ்பட் நகரில் உள்ளது லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பாதாள சாக்கடையை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. 

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது 48 வயதுடைய துப்பரவு தொழிலாளர் ஒருவர் இன்று உயிரிழந்தார். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பரவு பணியானது பொதுப் பணித் துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டு இருந்தது. உயிரிழந்தவர் பெயர் ரிஷிபல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெல்லியில் இதுபோன்று 10 மரணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6-ம் தேதி லஜ்பத் நகரில் சாக்கடை தூய்மை பணியின் போது 3 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com