

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாமா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். தொழுகைக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் மசூதி அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இன்று ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த பீம்சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.