டெல்லியில் புகைமூட்டம் - மாசு அதிகரிப்பால் மக்கள் அவதி

டெல்லியில் இன்று காலை கடுமையான புகைமூட்டத்தால் மாசு அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
டெல்லியில் புகைமூட்டம் - மாசு அதிகரிப்பால் மக்கள் அவதி
Published on

டெல்லியில் இன்று காலை கடுமையான மூடுபனி நிலவியது. இதனால் வெள்ளை நிற திரைபோட்டது போன்று கடுமையான புகைமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் மாசு அதிகரித்தது. தீபாவளியில் இருந்து இதுபோன்று 2-வது தடவையாக நிகழ்ந்துள்ளது.

பொதுவாக காற்றின் தரம் 0 முதல் 50 வரை இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் இன்று காலை 9 மணியளவில் 411 ஆக இருந்தது. இது மிக கடுமையான மாசு என கருதப்படுகிறது.

கடுமையான புகைமூட்டம் இருந்ததால் 200 மீட்டர் தூரத்துக்கு மேல் எதையும் பார்க்க முடியவில்லை. காற்றில் மாசு அளவு 12 முதல் 19 மடங்கு அதிகம் இருந்தது. எனவே காலை வேளையில் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகளில் ஈடுபட வேண்டாம் என டெல்லி அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

டெல்லியில் 18 இடங்களில் மாசு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் கிடைத்த தகவல்களின்படி டெல்லியில் அதிக அளவுமாசு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேற்கு டெல்லியில் உள்ள ஹாதிபூரில் அதிக அளவு மாசு உள்ளது. அங்கு மாசு அளவு 448 ஆக இருக்கிறது. மேலும் ஆனந்த விகாஸ், ஆர்.கே. புரம், பஞ்சாபி பாக் ஆகிய இடங்களிலும் அதற்கு அடுத்தப் படியாக காற்றில் மாசு அளவு அதிகமாக உள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையே வருகிற 19-ந் தேதி டெல்லியில் மினி மாரத்தான் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com