கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளை போலீசார் இழுத்துப்போட்டு அடிப்பதா? - சோனியா ஆவேசம்

டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிட்ட சோனியா காந்தி கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளை போலீசார் அடிப்பதா? என வினவியுள்ளார்.
சோனியா காந்தி
சோனியா காந்தி
Published on

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை இன்று மாலை சந்தித்து முறையிட்டனர்.

பின்னர், ஜனாதிபதி மாளிகை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி ஜாமியா கல்லூரி விடுதிக்குள் புகுந்து மாணவிகளை போலீசார் இழுத்துப்போட்டு அடிப்பதா? என கேள்வி எழுப்பினார்.

ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்த போலீசார் ஈவிரக்கமின்றி மாணவிகளை வெளியே இழுத்துப்போட்டு அடித்துள்ளனர் என்ற உதாரணத்தை டெல்லி போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.

மக்களின் குரலை அடைத்துவிட்டு சட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி தலைமையிலான அரசு இரக்கமே காட்டுவதில்லை’ எனவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com