டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

புதுடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கி
துப்பாக்கி
Published on

புதுடெல்லி:

டெல்லி தவுலா கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்தவர் பருன் தியாகி. இவர் இன்று காலை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ்காரர் ஒருவர், அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக ஹரி நகர் பகுதியில் உள்ள ஊழியர் குடியிருப்பில் மற்றொரு கான்ஸ்டபிள் தற்கொலை செய்துகொண்டார். 

கடுமையான பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் காவலர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com