செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சி முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலை 7 மணியளவில் செங்கொட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சரியாக 7.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.

முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com