டெல்லி 5 ஸ்டார் ஓட்டலில் பெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்த மேலாளர் கைது

டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலின் மேலாளர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்தது சிசிடிவி கேமரா மூலம் வெளிச்சத்தற்கு வந்துள்ளது.
டெல்லி 5 ஸ்டார் ஓட்டலில் பெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்த மேலாளர் கைது
Published on

புதுடெல்லி:

புதுடெல்லியின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரைட் பிளாசா என்ற 5 நட்சத்திர ஓட்டல் மேலாளர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியரிடம் தவறாக நடந்த கொண்டதாக கடந்த 1-ம் தேதி போலீசிற்கு புகார் வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி விடுதியின் மேலாளர் அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துள்ளார். பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த மற்ற ஊழியர்களை வெளியே போக சொல்லிவிட்டார்.

அந்த பெண்ணின் புடவையை இழுப்பது போன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர் பெண்ணை தனது காருக்குள் தள்ளி விடுவதும் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் ஓட்டல் மேலாளரை மூன்று வாரங்களுக்கு பின் இன்று கைது செய்தனர். மேலும், அவரை வேலையிலிருந்து ஓட்டல் நிர்வாகம் நீக்கிவிட்டது.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ‘மேலாளர் குறித்து ஓட்டல் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து போலீசில் புகார் அளித்தேன்’ என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com