ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது - டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #DelhiHC #AAPMLAs
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது - டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Published on

டெல்லியில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதன்படி 20 எம்.எல்.ஏ.க்களையும் ஜனாதிபதி தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், தகுதிநீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com