டெல்லி: குடிசைப் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி

டெல்லியில் குடிசைப் பகுதி அருகேயுள்ள ஒரு டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் அருகாமையில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி: குடிசைப் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி
Published on

புதுடெல்லி:

டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஓக்லா பகுதியில் சில தற்காலிக குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒரு குடும்பத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர்களில் இருந்து சிலர் வந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் இங்குள்ள ஒரு டீக்கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. இதனால், அந்த டீக்கடையில் பற்றிய தீ, மளமளவென்று அருகாமையில் உள்ள குடிசைப்பகுதிக்கு பரவியது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக விரைந்துவந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

எனினும், இவ்விபத்தில் அப்பகுதியில் இருந்த இரு குடிசைகள் தீக்கிரையாகின. தீயில் சிக்கிய ஆறு வயது குழந்தை, மூன்று பெண்கள் உள்பட ஐந்துபேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com