ரூ.390 கோடி வங்கி மோசடி - மேலும் ஒரு வைர வியாபாரி சிக்கினார்

நிரவ் மோடி, மெஹுல் சோஸ்கியை தொடர்ந்து வங்கியில் 389.85 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்த டெல்லி வைர வியாபாரி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். #Delhi #diamondexporter
ரூ.390 கோடி வங்கி மோசடி - மேலும் ஒரு வைர வியாபாரி சிக்கினார்
Published on

புதுடெல்லி:

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் துவாரகா தாஸ் சேத் நிறுவனம், அரசு பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் இருந்து நீண்டகால தவணை கடனாக பல கோடி ரூபாய்களை பெற்றுகொண்டு தில்லுமுல்லுவில் ஈடுபட்டு வருவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக வங்கியின் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.  அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கடந்த 2012-2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தங்கம், வைரம் கொள்முதல் செய்வதாக பெற்ற வங்கிக் கடனில் பெரும் பகுதியை தங்களது தனிப்பட்ட கடனை அடைக்க இந்நிறுவனத்தார் பயன்படுத்திய உண்மை அம்பலமானது.

இதையடுத்து, மேற்படி நிறுவனத்தின் இயக்குனர்கள் சாப்யா சேத், ரீட்டா சேத், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் நிதி மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். #Delhi #diamondexporter #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com