டெல்லி: பவானா தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

டெல்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். #BawanaFire
டெல்லி: பவானா தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கில் கடந்த 21-ம் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவென பரவிய தீ கிடங்கு முழுவதும் பரவியது.

10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இன்று சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காசோலைகளை வழங்கினார். #BawanaFire 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com