ஐ.பி.எல். தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்

ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.
மணிமாறன் சித்தார்த்
மணிமாறன் சித்தார்த்
Published on

ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த்  இடம் பெற்றுள்ளார்.  டெல்லி அணி ஏலத்தில் அவரை ரூ. 20 லட்சத்துக்கு எடுத்து இருந்தது.

அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் நடக்க இருந்த முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி இந்த வருடம் ஜனவரி மாதம் நடந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் 4/20 எனச் சிறப்பாகப் பந்துவீசி தமிழக அணி கோப்பையை வெல்ல மணிமாறன் சித்தார்த் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில்  மணிமாறன் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்,  ஐ.பி.எல். போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மணிமாறனுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியாவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com