இண்டர்ஸ்டேட் டி-20 கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கோப்பை வென்றது

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி போட்டியில் ராஜஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி கோப்பையை கைப்பற்றியது.
இண்டர்ஸ்டேட் டி-20 கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி கோப்பை வென்றது
Published on

கொல்கத்தா:

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான சையத் முஷ்டாக் அலி டிராபி டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடந்த இறுதி போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீரும், ரிஷப் பந்தும் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 41 ரன்களாக இருந்தபோது கம்பீர் 27 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, ரிஷப் பந்த் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், உன்முக்த் சந்த் பொறுப்பாக ஆடி 49 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து, டெல்லி அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் கலீல் அகமது, ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டும், லம்பா, அனிகேத் சவுத்ரி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 154 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஆதித்யா கர்வால் மட்டும் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் நிலைத்து ஆடவில்லை.

இதனால் ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. டெல்லி அணி சார்பில் சங்வான், கெஜ்ரோலியா, நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சுபோஷ் பதி, நிதிஷ் ரானா, யாதன், மிலிந்த்குமார் ஆகியொர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com