

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், அரசு ஆலோசகர், அரசு செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், அரசு டாக்டர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்ட டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேருக்கு விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. வருகிற 23, 24-ந் தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.