டெல்லி குடோனில் தீவிபத்து- 4 பேர் பரிதாப பலி

டெல்லியில் உள்ள சுல்தான்பூரி குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி குடோனில் தீவிபத்து- 4 பேர் பரிதாப பலி
Published on

புதுடெல்லி:

டெல்லியின் சுல்தான்பூரி பகுதியில் உள்ள குடோனில் இன்று காலை 6 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 9 தீயணைப்பு வண்டிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. தீயணைப்புப்படையினர் மிகவும் சிரமப்பட்டு தீயை அணைத்தனர்.

இந்நிலையில், தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com