பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சியாச்சின் செல்கிறார்

பாதுகாப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ராஜ்நாத் சிங் நாளை சியாச்சின் பனிமலைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை சியாச்சின் செல்கிறார்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் 57 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் நேற்று முறைப்படி மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ராஜ்நாத் சிங், தனது முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் செல்கிறார். அவர் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அவர் ஸ்ரீநகருக்கு செல்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com