பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்

பாதுகாப்பு துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.
பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இதையடுத்து, பிரதமர் உள்பட 54 மந்திரிகளுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை மந்திரியாக இன்று பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com