தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தேஜஸ் போர் விமானத்தில் பறந்து சென்றார்.
தேஜஸ் விமானத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
தேஜஸ் விமானத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
Published on

பெங்களூரு:

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று வருகை தந்தார்.  அவர், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு சென்றார்.

இதன்பின் தேஜஸ் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பின்னர் விமானத்தில் பறந்தார்.  தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை துணை தளபதி என். திவாரி சென்றார்.

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை மந்திரி என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com