சியாச்சின் உச்சியில் இருக்கும் போர் நினைவுச் சின்னத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை

எல்லை பாதுகாப்பு குறித்த ஆய்வு பணிகளுக்காக காஷ்மீர் மாநிலம் சென்றிருக்கும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சியாச்சின் உச்சியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
சியாச்சின் உச்சியில் இருக்கும் போர் நினைவுச் சின்னத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை
Published on

ஸ்ரீநகர்:

பாதுகாப்பு துறை மந்திரியாக சமீபத்தில் பதவியேற்ற நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சென்றார். அங்கு, அம்மாநில கவர்னர் வோஹ்ரா மற்றும் ராணுவ தலமை தளபதி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, சியாச்சின் உச்சிக்கு இன்று சென்ற அவர் அங்குள்ள போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களிடன் உரையாடினார்.

இதனையடுத்து, லே பகுதிக்கு சென்ற அவர் அங்கு புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒன்றை திறந்து வைத்தார். இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் இந்த பதட்டமான சூழ்நிலையில் பாதுகாப்புத் துறை மந்திரி அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com