ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை: தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்.
அட்டானு தாஸ், தீபிகா குமாரி
அட்டானு தாஸ், தீபிகா குமாரி
Published on

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான தீபிகா குமாரி - அட்டானு தாஸ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் யிச்சை செங் - சயோஜுயுயான் வெய் ஜோடியை எதிர்கொண்டார். இதில் இந்திய ஜோடி 6-2 என வெற்றி பெற்றது.

இந்திய பெடரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பொதுவான கொடியை ஏற்றுள்ளனர்.

மற்றொரு ஜோடியான அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா அரையிறுதியில் கொரியா ஜோடியை 159-154 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுநாள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com