உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: காயத்தால் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார் தீபக் புனியா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து காயத்தால் விலகியதால், வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபக் புனியா.
தீபக் புனியா
தீபக் புனியா
Published on

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, ரவி குமார் தஹியா ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.

இந்நிலையில் தீபக் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் வெள்ளிப் பதக்கத்தோடு திருப்தியடைந்தார். மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுஷில் குமார் (2010 66 கிலோ எடைபிரிவு) மட்டுமே தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com