

தஞ்சாவூர்:
தஞ்சை கொண்டிராஜ பாளையத்தில் அ.தி.மு.க. ஜெ.தீபா அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் அசோகன் தலைமை தாங்கினார். இதில் நகர ஒருங்கிணைப்பாளர் சுபா, விஷ்ணுநாதன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கிய ராஜ், செல்வராஜ், கோட்டை நாகராஜ், சிவஞானம், செந்தில், கூடலூர் தேவேந்திரன், மாவட்ட அவை ஒருங்கிணைப்பாளர் யோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஜெ.தீபா பேரவையில் உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியில் நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்.ஜெ.தீபாவை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.