

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைமை செய்தி தொடர்பாளர்கள் பசும்பொன் பாண்டியன், சரஸ்வதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவின் நேரடி ரத்த வாரிசு தீபா. பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூர்வீகமான போயஸ் கார்டன் வீட்டிற்குள் செல்லுவதை தடுக்கும் கபோதிகள் யார்? அவருடன் சென்றவர்களை தாக்கிய மன்னார்குடி மாபியா கும்பலை கைது செய்யாதது ஏன்? பூர்வீக வீட்டிற்கு செல்ல கூடாதா? தமிழகத்தில் காவல் துறை பினாமி முதல்வர் இபிஎஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா? அல்லது சசிகலா தினகரனின் ஏவல் துறையாக காவல்துறை மாறி விட்டதா?
பத்திரிகையாளர்களை தாக்கிய காவல்துறையை அதிமுக ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் தீபா சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை சுயமாக சட்டத்தை கையில் எடுத்து பேட்டை ரவுடிகள் போல் செயல்படுவதா? தீபா பாட்டி வீடு போயஸ் கார்டன் அவர் ஓடி விளையாடிய வீட்டிக்குள் யாரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
காலம் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சியும் மாறும் நாளைய தமிழக முதல்வர் தீபா போயஸ் கார்டனிலிருந்து மக்களுக்கான ஆட்சி பணியை நடத்த போவது உறுதி உறுதி.
அம்மாவின் தொண்டர்கள் பட்டாளத்துடன் சசிகலா குடும்பத்திடம் இருந்து விரைவில் போயஸ் கார்டனை தமிழகமே படையெடுத்து மீட்கப்போவது உறுதி.
நாஞ்சில் சம்பத் போன்ற நாக்கு வியாபாரிகள் நாவை அடக்க வேண்டும். புகழேந்தி போன்ற வந்தேரிகள் வாய்க்கு வந்ததை பேசி உளறி திரிய வேண்டாம். அவர்கள் தவறான பேச்சுகளை நிறுத்தவில்லை என்றால் அ.தி.மு.க. ஜெ.தீபா அணி அவர்களை முறையாக சந்திக்கும். அவர்கள் தமிழகத்தில் எங்கும் மேடை போட்டு பேசமுடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.