வாட்ஸ்-அப்பில் அவதூறு: தீபாவுக்கு கொலை மிரட்டல்

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப்பில் அவதூறு: தீபாவுக்கு கொலை மிரட்டல்
Published on

சென்னை:

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் இந்த புகாரை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது அமைப்பில் இருந்து மதுரையை சேர்ந்த வக்கீல் பசும்பொன் பாண்டியன் கடந்த 7-ந்தேதி நீக்கப்பட்டார். என்னுடைய அனுமதியின்றி அவர் வாட்ஸ்-அப்பில் சிலரை சேர்த்துக் கொண்டு அவதூறு பரப்புகிறார். எனது செல்போனில் சிலர் தொடர்பு கொண்டு மிகவும் தரக்குறைவாக பேசினார்கள்.

அவருடன் முத்துக்குமார், முத்துசாமி, எபாசியர், முரளி அகர்வால் மற்றும் பெயர் தெரியாத சிலர் வரைமுறையின்றி போனில் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவதூறாக பேசுகிறார்கள்.

என்னைப்பற்றி சமூக வலைதளங்களிலும் அவள், இவள் என்று குறிப்பிடுகிறார்கள். என்னை கர்நாடகத்துக்கு ஓடிவிட வேண்டும் என்றும் பதிவிடுகிறார்கள். எனவே மேற்கண்ட நபர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீபா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com