எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம்: தீபா அதிரடி அறிவிப்பு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம்: தீபா அதிரடி அறிவிப்பு
Published on

சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில்(இன்று) புதிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தீபாவின் ஆதரவாளர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனை முடிந்து மாலை 6 மணியளவில் செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன்.

ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. இரட்டை இலையை மீட்போம். தற்போதையை அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. தீபக்கின் நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இயக்க கொடியை அறிமுகம் தீபா செய்தார். கருப்பு, சிவப்பு நிறங்கள் மற்றும் நடுவில் வெள்ளை நிறத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படம் உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com