டெல்லி: பல்கலைகழக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைகழக வளாகத்தில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
டெல்லி: பல்கலைகழக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
Published on

புதுடெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் அழுகிய உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் பல்கலைகழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட நபரின் பெயர் ராம்பிரவேஷ் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடல் அழுகிய நிலையில் இருப்பதால் 6-7 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இறந்தவர், பல்கலைகழகத்தில் செக்யூரிட்டி அல்லது தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com