பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது- கணவரை கொன்று மனைவி தப்பி ஓட்டம்?

கொடைக்கானல் மலைச்சாலையில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது- கணவரை கொன்று மனைவி தப்பி ஓட்டம்?
Published on

தேவதானப்பட்டி:

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம்பாறை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சமூக வலை தளங்கள் மூலம் இறந்தவர் புகைப் படத்தை அனுப்பி வைத்து அவர் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர். தற்போது இறந்தவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த அமீர் என தெரியவந்துள்ளது. அவரது படத்தை பார்த்து உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

இவரை எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. அமீரின் மனைவி தலைமறைவாக உள்ளார். அமீர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் ஊர் திரும்பி உள்ளார்.

குடும்ப பிரச்சினையில் மனைவி கணவரை கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com